கொள்கலன், சிற்றூந்து நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் பலி!

வெல்லவாய, தெலுல்ல பிரதேசத்தில் கொள்கலன் ஊர்தியொன்றும், சிற்றுந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் சிற்றுந்தின் சாரதி உயிரிழந்தார்.

சியம்பலாண்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

சீனி ஏற்றிச் சென்ற கொள்கலன் ஊர்தியும், எதிரில் வந்த சிற்றுந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அத்துடன், சிற்றுந்தில் பயணித்த இருவர் பலத்த காயங்களுடன், வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிற்றுந்தின் சாரதியின் கவனக் குறைவால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதுதொடர்பில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply