நுகேகொட, நாவல வீதியில் கார் ஒன்று மோட்டார் வாகனம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் இருவர் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகி உள்ளது.
விபத்தில் ஒரு வயது மற்றும் 5 வயதுடைய சிறுவர்கள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.
இவ் விபத்து தொடர்பில் கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.






