வீசா வழங்கும் அலுவலகங்களில் மோசடி: விசாரணை ஆரம்பம்

கொழும்பு, ஓக 8

இத்தாலிய தூதரகத்தின் வீசா வழங்கும் அலுவலகத்தை அண்மித்து முன்னெடுக்கப்படும் மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

இத்தாலி செல்வதற்காக கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள இரவில் இருந்து காத்திருக்கும் விண்ணப்பதாரிகளிடம் 30 ஆயிரம் ரூபா கப்பம் பெற்றுக் கொண்டு வரிசையின் முதல் இடங்களை விற்பனை செய்யும் மோசடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக இத்தாலிய தூதூவரினால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் இந்த நிலைமை காரணமாக நாட்டில் வீசா அலுவலகத்தை தொடர்ந்து நடத்திச் செல்வது சிக்கலுக்குள்ளாகியுள்ளதாகவும் இத்தாலிய தூதூவரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த விடயம் தொடர்பில் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ள போதிலும் இதுவரை எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதனையடுத்து தூதுவர் பாதுகாப்பு பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றினால் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

அத்துடன் கொழும்பிலுள்ள இத்தாலிய தூதரகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply