கொரோனாவால் 10 பேர் நேற்று உயிரிழப்பு!

நாட்டில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி மேலும் 10 பேர் நேற்று உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,770 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில், 30 வயதிற்கு குறைந்த பெண் ஒருவரும், 30 – 59 வயதுக்கு இடைப்பட்ட ஆண் ஒருவரும், 60 வயதுக்கு மேற்பட்ட 08 பேரும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

60 வயதுக்கு மேற்பட்மோரில் 04 ஆண்களும் 04 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோல், நாட்டில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 541,639 அதிகரித்துள்ளது.

மேலும், 448 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனாத் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 513,540 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply