வட மாகாண ஆளுநரை சந்தித்தார் இந்தியத் துணைத் தூதுவர்!

இந்தியத் துணைத் தூதுவர் ராகேஸ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் மற்றும் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இந்தியத் துணைத் தூதுவர், புதிய வட மாகாண ஆளுநருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

மேலும், வட மாகாணத்தில் இந்திய திட்டங்கள் மற்றும் இந்தியாவின் அபிவிருத்தி ஒத்துழைப்பு வாய்ப்புகள், குறிப்பாக கல்வி, சுற்றுலா துறை, தகவல் தொழில்நுட்பம், விவசாய உற்பத்திகள், சுகாதாரம் மற்றும் வீட்டுத்துறை தொடர்பான விடயங்கள் குறித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

Leave a Reply