
உரத் தட்டுப்பாடு காரணமாக, மரக்கறிகளின் விலை 100 வீதம் உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவிக்கையில்,
பொருளாதார மையங்களுக்கு மரக்கறி வரத்து குறைந்துள்ளது.
முன்னதாக, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு 2.5 மில்லியன் கிலோக்கிராம் மரக்கறிகள் கிடைத்தன. தற்போது மரக்கறிகளின் இருப்பு 3 லட்சம் கிலோக்கிராமாகக் குறைந்துள்ளது.
அடுத்த இரண்டு மாதங்களில் மழை அதிகரிப்பால் மரக்கறிகளின் விலை மேலும் உயரும்.
மொத்த சந்தையில் 200 ரூபாவாக இருந்த ஒரு கிலோக்கிராம் பீன்ஸ் சில்லறை சந்தையில் 450 ரூபாவாகவும், ஒரு கிலோக்கிராம் 280 ரூபாவாக இருந்த மிளகாய் 540 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று மொத்த விற்பனை சந்தையில் பச்சை மிளகாய், வெண்டைக்காய், கரட் உள்ளிட்ட ஏனைய மரக்கறிகளின் விலையும் உயர்வடைந்துள்ளது.- என்றனர்.





