உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு!

கிண்ணிய பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சூரங்கல் கிராம சேவகர் பிரிவில் உள்ள கிண்ணியா அல் அமீன் பாடசாலையில் வறுமை கோட்டின் கீழ் வாழும் பாடசாலை மாணவர்களின் குடும்பகளுக்கு சுமார் 6000.00 ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகள் பாடசாலை வளாகத்தில் வைத்து வழங்கப்பட்டன.

மேலும் சிறப்பாக கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி தலைமையில் இன்று (08) இடம் பெற்ற குறித்த நிகழ்வில் உலர் உணவுப் பொதிகளானது முஸ்லிம் எயிட் நிறுவனம் ஊடாக வழங்கி வைக்கப்பட்டன.

இதில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப், முஸ்லிம் எயிட் நிறுவன ஊழியர்கள் பயனாளிகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply