தடுப்பூசி அட்டையை பரிசீலிக்கும் நடைமுறையை கட்டாயமாக்க கோரிக்கை!

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டதை உறுதிப்படுத்தும் தடுப்பூசி அட்டையை பரிசீலிக்கும் செயற்பாட்டை, அரசாங்கம் கட்டாயமாக்க வேண்டுமென ராகம மருத்துவ பீடத்தின் சிஸே;;ட பேராசிரியர் அர்ஜுன டி சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

விடுதிகள் மற்றும் பொது இடங்களுக்குச் செல்பவர்களின் தடுப்பூசி அட்டையை கட்டாயம் சரிபார்த்து, அவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனரா என்பதை உறுதிப்படுத்திய பின் அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறானதொரு திட்டத்தைக் கடைபிடிப்பதன் மூலம், தொற்றுப் பரவலை கணிசமானளவுக் கட்டுப்படுத்த முடியும் என்பதோடு தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுக்கும் இளைஞர்களை, ஊக்கப்படுத்த சிறந்த வழியாகவும் அமையும்.

குறிப்பாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதற்கிடையில், வைரஸின் புதிய திரிபுகள் நாட்டில் கண்டறியப்பட்டு வருகின்றன.

எனவே, தடுப்பூசி மற்றும் அடிப்படை சுகாதார விதிமுறைகளை தொடர்ந்து பின்பற்றுவதன் மூலமே புதிய வைரஸ் தொற்றிலிருந்து இருந்து விடுபட முடியும். முகக்கவசங்களை கட்டாயமாக்கும் சட்டம் நாட்டில் கடுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்.

மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் அவ்வப்போது புதிய சுகாதார வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்துவது முக்கியம் என்றும், இந்த சுகாதார வழிகாட்டுதல்கள் முறையாகச் செயற்படுகின்றனவா என்பதை தொடர்ந்தும் கண்காணிப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply