யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொக்கணை பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டதோடு, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிசாருக்கு கிடைக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் குறித்த பகுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இதில், கோடா, 20 லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய உபகரணங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பில், மேலதிக விசாரணைகளின் பின் சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






