இலங்கையை சுபீட்சமான நாடாக ரணில் மாற்றுவார்! – எகிப்து ஜனாதிபதி நம்பிக்கை

இலங்கையை முன்னேற்றம் மற்றும் சுபீட்சத்திற்கு இட்டுச் செல்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு உள்ள திறமையில் எகிப்து அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது என எகிப்து அரபுக் குடியரசின் ஜனாதிபதி அப்தெல் பத்தா அல் சிசி தெரிவித்துள்ளார்.

எகிப்து அரபுக் குடியரசின் ஜனாதிபதி அப்தெல் பத்தா அல் சிசி அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் .

மேலும் இரு நாடுகளின் பொதுவான நலன்களை முன்னெடுப்பதற்கும், இரு நாட்டு மக்களுக்கு மிகவும் வளமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கும் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த ஆர்வமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

பிற செய்திகள்

Leave a Reply