வரிசைக்கு அருகே செல்லும்போது எனக்கு மரண பயம் ஏற்படுகிறது! முன்னாள் ஜனாதிபதி

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் வரிசைகளுக்கு அருகில் செல்லும் போது எனக்கு மரண பயம் ஏற்படுகின்றது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கியூஆர் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் நாட்டில் எரிபொருள் வரிசைகளுக்கு பஞ்சமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் இந்நிலையை தவிர்க்க நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply