ஒன்றிணைந்து செயற்பட காலம் வந்துவிட்டது – ஹக்கீம்

தமிழ் மற்றும் முஸ்லீம் தரப்புகள் தேர்தல் உட்பட அனைத்து நடவடிக்கையிலும் ஒன்றிணைந்து செயற்படுவது மிகவும் அவசியமானது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்று நடைபெற்ற தமிழ் கட்சிகளுக்கு இடையிலான கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே ரவூப் ஹக்கீம் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சி இந்த கலந்துரையாடலில் பங்கேற்காமை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ஏற்கனவே தமிழரசுக் கட்சியுடனும் ஏனைய கட்சிகளுடன் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என குறிப்பிட்டார்.

அடையாள ரீதியாக இன்று இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தாலும் எதிர்வரும் காலங்களில் இதனை முன்கொண்டு செல்வதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அத்தோடு தமிழர்களும் முஸ்லீம்களும் தேர்தல் உட்பட அனைத்து நடவடிக்கையிலும் ஒன்றிணைந்து செயற்படச் சாத்தியப்பாடுகள் இருக்கின்றன என்றும் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

Leave a Reply