ஒரு நாள் சேவைக்கூடாக தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளும் முறையின் கீழ், கொழும்பை தவிர தூரப் பிரதேசங்களிலிருந்து வருபவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
இத்தகவலை, குறித்த திணைக்களத்தின் ஆணையாளர் வியானி குணத்திலக்க தெரிவித்துள்ளார்.
மேலும், தொலைபேசி அழைப்பினூடாக திகதியையும் நேரத்தையும் முன்பதிவு செய்துகொள்ளுபவர்களுக்கே, ஒரு நாள் சேவைக்கூடாக தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த வாரம் மட்டும் 6,000 தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.






