மத்திய வங்கி ஆளுநராக கப்ரால் நியமிக்கப்பட்டமைக்கு எதிரான மனு நிராகரிப்பு!

மத்திய வங்கி ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

குறித்த மனு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சராக பதவி வகித்துவந்திருந்த அஜித் நிவாட் கப்ரால்,  அப் பதவியிலிருந்து விலகியதன் பின்னர், மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இந்த நியமனமானது, சட்டத்துக்கு முரணானது எனத் தெரிவித்து அதனை சவாலுக்கு உட்படுத்தும் வகையில், தென் மாகாண முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோனினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply