20 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் பெண் கைது

கொழும்பு – கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் 20 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் குறித்த பெண் போதைப் பொருட்களை விற்பனை செய்வதாகவும், பிரிதொரு நபருக்கு அதிகளவு போதை பொருட்களை விற்பனை செய்வதற்கு தயாராக இருப்பதாகவும், பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட் பெண் 40 வயதுடைய கிராண்பாஸ் பகுதியைச் சேர்ந்தவராவார்.

இவரிடமிருந்து 83 கிராம் 83 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கிராண்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply