அரசாங்கத்திடம் இருந்து வீடு வாங்கித் தருவதாக கூறி நிதி மோசடி!

Man in handcuffs behind his back

அரசாங்கத்திடம் இருந்து வீடு வாங்கித் தருவதாக கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட நபர் மாலிகாவத்த, கெத்தாராம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கெத்தாராம பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

குறித்த நபரால், 2017 மற்றும் 2018 ஆண்டுகளில் சுமார் 6 இலட்சம் ரூபா நிதி இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப் பிரிவிற்கு இரண்டு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தார்.

முறைப்பாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு பின்னர் குறித்த நபர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர் இன்று புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ள நிலையில், கொழும்பு குற்றப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply