வெளிநாட்டு தூதுவர்களின் செருப்பை துடைக்கும் அமைச்சர்கள்; சஜித் சாடல்

அரசாங்கத்தில் உள்ள சில அமைச்சர்கள், வெளிநாட்டு தூதுவர்களின் செருப்பை துடைப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

அகலவத்தையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

நாட்டினை ஆட்சி செய்யும் ஆட்சியாளர்கள் வெளிநாட்டு தூதுவர்களிடம் சரணடைந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி அரசாங்கத்தில் உள்ள சில அமைச்சர்கள், வெளிநாட்டு தூதுவர்களின் செருப்பை கூட துடைப்பதாகவும் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், நிராகரிக்கப்பட்டு நாட்டிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட உரக்கப்பல் வலுக்கட்டாயமாக நம் நாட்டுக்கு திருப்பி கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எமது நாட்டின் வளங்கள், வெளிநாட்டவர்களால் சூறையாடப்படுகின்ற இந்த நிலையில், நான் ஜனாதிபதியாக இருந்து இருந்தால் தலைமைத்துவம் என்ன என்பதைக் காட்டி இருப்பேன் என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

அது ஓர் இரகசியம்’ வரவு- செலவு திட்டம் குறித்து பசில் கருத்து

Leave a Reply