யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற தமிழ்க் கட்சிகளின் கூட்டத்தில் பங்கு கொண்டிருந்தவருக்கு டென்மார்க்கில் இருந்து மிரட்டல் விடப்பட்டுள்ளது.
13 ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் ரெலோவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இச் சந்திப்பில் 8 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்குகொண்டிருந்தனர்.
இதன்போது, முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கட்சியான தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் வி.பி.சிவநாதன் பங்குகொண்டிருந்தார்.
கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த சமயம், சிவநாதனின் தொலைபேசிக்கு அழைப்பு வந்துகொண்டு இருந்தது. மறுமுனையில் டென்மார்க்கில் இருந்து ஒருவர் உரையாடியதோடு, இந்தக் கூட்டத்தில் இருந்து உடன் வெளியேற வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால், சிவானாதன் அச்சமடைந்தபோதும் ஏனைய கட்சித் தலைவர்கள் வழங்கிய ஆறுதலின் பெயரில் கூட்டத்தில் பங்குகொண்டார்.






