அடுத்தகட்டப் போராட்டம் அறிவிக்கப்படும்! ஸ்டாலின்

நாடளாவிய ரீதியில் ஆசிரியர்கள் – அதிபர்களின் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்ற வகையில், பாடசாலை மனவர்களின் பெற்றோர்களும் பங்களித்துள்ளனர்.

இந்த நிலையில், ஆசிரியர்கள் – அதிபர்கள் வேதன முரண்பாடுகளையும் போராட்டத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக ஆசிரியா்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் இன்று கொழும்பில் ஒன்று கூடுகின்றன.

இதனை ஆசிாியர் சேவை சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தொிவித்துள்ளார்.

பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடும் ஆசிாியர்களும் அதிபர்களும், பாடசாலை நேரத்துக்கு பின்னர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, ஆசிரியர்களின் அடுத்தகட்டப் போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply