மொட்டு கட்சியின் ஐந்தாவது ஆண்டு நிறைவு நிகழ்வு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஐந்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றது.

அதன்படி இபெருமையுடன் சுபீட்சத்தை நோக்கி எனும் தொனிப் பொருளில் நாடளாவிய ரீதியில் கட்சி பிரமுகர்களால் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில்இ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கல்குடா தொகுதி ஏற்பாட்டாளர் எஸ்.ஏ.முஹம்மட் கலீமின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பிறைந்துரைச்சேனை அல் குறைஸ் பாலர் பாடசாலை வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.

இந்நிகழ்வுஇ அல் குறைஸ் பாலர் பாடசாலை தலைவர் எஸ்.எச்.புர்ஹானுதீன் தலைமையில் இடம் பெற்றது.

மேலும்இ பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கல்குடா தொகுதி ஏற்பாட்டாளர் எஸ்.ஏ.முஹம்மட் கலீம் கலந்து கொண்டதுடன் அதிதிகளாக ஓய்வு பெற்ற ஆசிரியர் எம்.எம்.எம்.உசனார்இ சமுக சேவையாளர் அஷ்ஷெய்க் ஏ.யூ.நளீம்இ நாவலடி றஹ்மத் பள்ளிவாயல் தலைவர் எம்.ஜெயினுதீன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Leave a Reply