
16 வயதுச் சிறுவன் செலுத்திச் சென்ற சொகுசுக்கார், 4 வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானது. அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நான்கு பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்து நீர்கொழும்பு பிரதான வீதியில் வெலிசர, பொது மயானத்துக்கு அருகில் நேற்றுக் காலை இடம்பெற்றுள்ளது. காயடைந்தவர்கள் ராகம மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து நீர்கொழும்பு திசையாகப் பயணித்த அதிசொகுசு கார், வீதியை விட்டு விலகி, எதிர்திசையில் பயணித்த இரு மோட்டார் சைக்கிள்களையும், முச்சக்கரவண்டி மற்றும் கார் ஒன்றையும் மோதி குடைசாந்தது.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார். அதேவேளை, அவருடன் பயணித்த மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் ராகம மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்





