நல்லைக்குமரன் நூல்வெளியீடும் யாழ். விருது வழங்கலும்!

யாழ்ப்பாண மாநகராட்சி மன்ற சைவசமய விவகார குழுவினரால் வருடந்தோறும் வெளியிடப்பட்டு வரும் நல்லைக்குமரன் மலரின் 29 ஆவது இதழ் வெளியீடும், சமய சமூகப் பணியாற்றும் ஒருவருக்கு வருடம் தோறும் வழங்கப்படும் யாழ் விருது வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் யாழ் மாநகர சபை ஆணையாளர் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாநகர முதல்வரும், சைவ சமய விவகார குழுவின் தலைவருமான வி.மணிவண்ணனும், சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் கலந்து கொண்டார்.

ஆன்மீகத் தலைவர்களின் ஆசியுரையோடு ஆரம்பமாகிய இந் நிகழ்வில் நல்லைக்குமரன் நூல்வெளியிடப்பட்டதுடன், இவ்வருடத்துக்கான யாழ் விருது சுன்னாகம் வாழ்வகத்தின் தலைவர் திரு.ஆ.ரவீந்திரனுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply