ஆசிரியர்களின் போராட்டம் நியாயமானது:அவர்களின் கோரிக்கையை உடன் நிறைவேற்றுக! திகாம்பரம் வலியுறுத்து

அதிபர் – ஆசிரியர்களின் போராட்டம் நியாயமானது. அரசு தாமதமின்றி அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என முன்னாள் அமைச்சரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் இணைத்தலைவருமான பழனி திகாம்பரம் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

அதிபர் – ஆசிரியர்கள் தமது கோரிக்கையை முன்வைத்து நீண்ட காலமாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக தற்போது பெற்றோர்களும் களம் இறங்கியுள்ளார்கள்.

பல இடங்களில் உள்ள பாடசாலைகளுக்கு முன்னால், அவர்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துப் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலை, தொடருமாக இருந்தால் மாணவர்களுடைய கல்வி பெரிதளவில் பாதிக்கப்படும்.

அத்துடன், கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் கல்வி நிலை பின்தங்கியுள்ளது.

இந்த விடயத்தை அரசு கருத்தில்கொண்டு அதிபர், ஆசிரியர்களுடைய கோரிக்கைகளைத் தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும்- என்றார்.

Leave a Reply