வவுனியாவில் தீபாவளி தினத்தில் வாள் வெட்டுச் சம்பவங்கள் உட்பட 30 வன்முறைகள் பதிவு

வவுனியாவில் நேற்று தீபாவளி தினத்தன்று மதுபோதையில் வாள் வெட்டுச்சம்பவங்கள் உட்பட 30 வன்முறைச் சம்பவங்கள் பொலிஸ் நிலையத்தில் பதிவாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர் .

இது குறித்து மேலும் தெரியவருகையில் ,

நேற்று (04) தீபாவளி தினத்தன்று மதுபோதையில் இளைஞர்களிடையே வாள் வெட்டுச் சம்பவங்கள் உட்பட வன்முறைச்சம்பவங்கள் 30 பதிவாகியுள்ளது .

இச்சம்பவத்தில் பலர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

ஒரே தினத்தில் அதிக சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதால் இச்சம்பவங்கள் குறித்து மேலதிக விசாரணைகள் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply