
கடற்கரை காபட் வீதி தொடர்பான கலந்துரையாடல் – சைனிங் விளையாட்டுக்கழக மைதானத்திற்கு பாதிப்பில்லாமல் வீதி அமைக்க கோரிக்கை!

-கேதீஸ்-
கல்முனை ஊடாக பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதிவரை அமைய இருக்கும் கடற்கரை காபட் வீதி அமைக்கும் வேலைகள் ஆரம்பமாகியுள்ளது. இந்த வீதி அமையும் போது தேவையான இடங்களில் மதகுகள் அமைப்பது ,மற்றும் கல்முனை சைனிங் விளையாட்டுக்கழகம் மற்றும் மாமாங்க வித்தியாலய மாணவர்களும் பயன்படுத்தும் மைதானத்திற்கு பாதிப்பலாமல் வீதியை அமைக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த வீதி தொடர்பான கலந்துரையாடல் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இன்று (05.112021) உதவி திட்டமிடல் பணிப்பாளர் இராஜகுலேந்திரன் தலைமையில் பிரதேச செயலாளரின் ஆலோசனையுடன் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன், வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியிலாளர், குறித்த பிரதேச கிராம சேவகர்கள் ,பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளர் ரிஸ்லி முஸ்தபாவின் செயலாளர், கடலோர பாதுகாப்பு உத்தியோகத்தர், மற்றும் வீதி அமைப்பு ஒப்பந்தகாரர் ,சைனிங் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது சைனிங் விளையாட்டுக்கழகம் பயன்படுத்டதும் மைதானம் அமைந்துள்ள இடத்தில் இருந்து கடல் தொலைவில் உள்ளதால் மைதானத்திற்கு பாதிப்பிலாமல் வீதியை அமைக்குமாறு சைனிங் விளையாட்டுக்கழகத்தினரும் மாநகரசபை உறுப்பினரான (12 ஆம் வட்டாரம்) சந்திரசேகரம் ராஜன் ஆகியோர் கோரிக்கை முன்வைத்தனர்.
கலந்துரையாடலை தொடர்ந்து மைதானம் அமைந்துள்ள இடத்திற்கு அனைவரும் விஜயம் செய்து வீதி அமையும் இடம் தொடர்பாக ஆராய்தனர்.
மைதானம் அமைந்துள்ள எல்லையில் இருந்து கடற்கரை பக்கமாக வீதியை அமைக்குமாறு கழகம் மற்றும் குறித்த பிரிவு கிராம பொது அமைப்புக்கள் மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ஆகியோர் கோரிக்கை கடிதங்களை பிரதேச செயலாளருக்கு வழங்குவதாகவும் குறித்த கோரிக்கை தொடர்பாக கவனம் செலுத்தப்படும் எனவும் வருகை தந்த உத்தியோகத்தர்கள் கூறினர். தொடர்ந்து பாண்டிருப்பு மஹா விஷ்ணு ஆலய நிருவாகத்தினரையும் சந்தித்து கலந்துரையாடினர்.





