முல்லைத்தீவு மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகளோடு டக்ளஸ் எம்பி சந்திப்பு

முல்லைத்தீவு மாவட்ட மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்குமிடையில் சந்திப்பு

முல்லைத்தீவிற்கு விஜயத்தினை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முல்லைத்தீவு மாவட்ட மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகளோடு சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்

குறித்த சந்திப்பானது, நேற்று வியாழக்கிழமை (04) மாலை முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாச கட்டிடத்தில் இடம்பெற்றது

இச் சந்திப்பின் போது, இந்திய இழுவைப்படகுகள் இனி எமது எல்லைக்குள் வராது எனவும் அவ்வாறு வந்தால் அவை கைது செய்யப்படும் எனவும் அமைச்சர் மீனவர்களுக்கு உறுதியாக தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

இந்திய இழுவைப்படகுகளால் வலைகள் மீன்பிடி உபகரணங்கள் சேதமாக்கப்பட்ட எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த விசேட வாழ்வாதார திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளது.

முல்லைத்தீவு – நந்திக்கடல் உள்ளிட்ட களப்புக்களிலும் கடலிலும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களை கைது செய்யுமாறும் அவற்றுக்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கடற்தொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதோடு பொலிஸாரையும் குறித்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு நாளாந்த அறிக்கைகளை தனக்கு அனுப்பி வைக்குமாறும், அடுத்து வரும் சில நாட்களில் இதன் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்வதாகவும் தெரிவித்தார்.

மேலும், கரைவலைப்பாடுகளுக்கான நிரந்தர அனுமதிகளை பெற்றுத்தருமாறும், மிக நீண்டகாலமாக தீர்க்கப்படாத வெளிமாவட்ட மீனவர் வருகையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கரைவலைத்தொழில் புரியும் இடத்தில் கடலுக்குள் உள்ள கழிவுகளை அகற்றி தருமாறும் அமைச்சரிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து, நில அளவீட்டு பணிகள் நிறைவடைந்து வருவதாகவும் மிகவிரைவில் அவற்றை செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, அண்மையில் மீனவர்கள் மேற்கொண்ட கடல்வழி போராட்டம் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்ட போது, சில மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் கூட்டத்தில் இருந்து வெளியேறி சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply