மகளுடன் தகாத உறவு: ஆற்றுக்குள் வீசப்பட்ட மூன்று நாள்களேயான சிசு மீட்பு! சம்பாந்துறையில் சம்பவம்!!

அம்பாறை மாவட்டத்தின் சொறிக் கல்முனை, சம்மாந்துறை பிரதான வீதியில் உள்ள கிட்டங்கி ஆற்றங்கரைக்குள் வீசப்பட்ட நிலையில் மூன்று நாள் மதிக்கத்தக்க சிசு இன்று மீட்;கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில், சம்மாந்துறை, சென்னல் கிராமத்தில் வசித்துவரும் 44 வயதுடைய பக்கீர் தம்பி அஸ்பர் என்பவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

குறித்த பகுதிக்கு, சந்தேக நபருடன் விரைந்த பொலிஸார் மற்றும் அம்பாறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினர், இராணுவத்தினர், கடற்படையினர் ஒன்றிணைந்து குறித்த சிசுவை மீட்டெடுத்தனர்.

சந்தேகநபரான பக்கி தம்பி அஸ்பர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, குழந்தையை பெற்றெடுத்த 19 வயதுடைய அவரது மகள் அஸ்வர் பாத்திமா பாஸ்லூன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, மருத்துவ பரிசோதனைகளுக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

13 வயதுடைய மற்றொரு மகளான அஸ்பர் பாத்திமா பத்ரிசாh என்பவர் தனது சகோதரியை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு உதவி செய்திருக்கிறார்.

தனது மகளுடன் தகாத உறவில் ஈடுபட்டு பிறந்த குழந்தையையே இவ்வாறு ஆற்றுக்குள் வீசியதாக தந்தையான சந்தேகநபர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான் உயிரிழந்த சிசுவை பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனையை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

இதனையடுத்து, அம்பாறை ஆதார வைத்தியசாலைக்கு சிசு எடுத்துச்செல்லப்பட்டது. மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply