நெல்லியடி, இராஜ கிராமத்தில் வீடு கட்டுமானப் பணியில் ஈடுபட்ட கட்டத் தொழிலாழிக்கு மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட தொழிலாளி மதில் மீது வீழ்ந்து தாக்கப்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கபடுகிறது.
துன்னாலைச் சேர்ந்த 35 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையான விஜயகுமார் விஜிதரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
உயிரிந்தவரின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.






