கவனயீனம் காரணமாக வீதியில் ஏற்பட்ட கோர விபத்து!

வாத்துவை- மொல்லிகொட பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில், விபத்தொன்று இடம்பெறுள்ளது.

குறித்த விபத்தில், மோட்டார் சைக்கிள் ஒன்றும் கெப் ரக வாகனம் ஒன்றும் மோதிக் கொண்டதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு பிரவேசிப்பதற்காக வீதியின் குறுக்காக மோட்டார் சைக்கிளை ஓட்டுனர் திருப்ப முயற்சித்த போதுஇ எதிர்த்திசையில் வந்த கெப் ரக வாகனத்தில் மோதுண்டது.

விபத்தில் படுகாயடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர், பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுனரின் கவனயீனம் மற்றும் கெப் ரக வாகனத்தின் அதிக வேகம் காரணமாக இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கெமராவில் இவ்வா்று பதிவாகி இருந்தது.

விபத்து தொடர்பில் கெப் ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, சந்தேகநபர் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

Leave a Reply