
சிறுமி மாயமாகி 18 நாள்களுக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அவுஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவுஸ்திரேலியா – கார்னர்வோன் நகருக்கு அருகே உள்ள ஒரு முகாம் தளத்தில் இருந்து கிளியோ சுமித் (வயது 4) என்ற சிறுமி கடந்த மாதம் 16ஆம் திகதி தனது குடும்பத்தின் கூடாரத்தில் இருந்து காணாமல் போயிருந்தார்.
இந்த சிறுமியைத் தேடி பெரியதொரு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சிறுமியை பற்றிய தகவல் தருவோருக்கு 7.5 லட்சம் அமெரிக்க டாலர்பரிசுத் தொகையை வழங்குவதாக அதிகாரிகள் அறிவித்தனர்.
இந்த நிலையில் ஒரு வீட்டில் சிறுமி பூட்டி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த இரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து குறித்த வீட்டை பொலிஸார் உடைத்தபோது அங்கு ஒரு அறையில் அந்த குறித்தசிறுமி இருப்பதை கண்டுபிடித்தனர்.
அதைத்தொடர்ந்து அந்தச் சிறுமி அங்கிருந்து மீட்கப்பட்டு, அவளது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.





