
இந்தியாவில் இருந்து ‘நனோ நைட்ரஜன் யூரியா’ திரவ உரம் இலங்கைக்கு இரண்டு கட்டமாக நேற்றுக்காலை எடுத்துவரப்பட்டது.
இந்திய விமானப்படை சரக்கு விமானங்களில் இது கொண்டுவரப்பட்டது. அதிகாலை ஒரு விமானத்திலும் முற்பகல் மற்றொரு விமானத்திலுமாக 100 தொன் நனோ நைட்ரஜன் யூரியா திரவ உரம் கொண்டுவரப்பட்டது.





