மயிலிட்டி மீள்குடியேற்ற அமைப்பு பிரதிநிதிதிகளுக்கும் சுமந்திரன் எம்.பிக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.
வலி.வடக்கு மயிலிட்டியில் மீள்குடியேற்ற அமைப்பு பிரதிநிதிதிகளுடன் உடனடியாக விடுவிக்கப்படவேண்டிய நிலப்பரப்புக்கள் தொடர்பாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்ஏ.சுமந்திரன் நேரில் ஆராய்ந்தார்.
இதன்போது, வலி. வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் மற்றும் மீள் குடியேற்ற அமைப்பின் தலைவர் குணபாலசிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
இக்கலந்துரையாடலில், மயிலிட்டியைச் சேர்ந்த மக்கள் சர்வதேச அழுத்தம் மற்றும் கூட்டமைப்பின் முயற்சியால் மயிலிட்டு துறைமுகம் விடுவிக்கப்பட்டது.
ஆனாலும், அதன் முழுமையான பயனை எமது மக்கள் அனுபவிக்க முடியவில்லை. இதேநேரம் துறைமுகத்தை நம்பி வாழ்ந்த மக்களின் வாழ்விடம் உள்ள 216 ஏக்கர் நிலமும் தொடர்ந்தும் இராணுவத்தினரின் பிடியில் இருப்பதனால் மீனவர் சமூகம் மிகவும் பாதிப்பை எதிர்தோக்குவதாக சுட்டிக்காட்டப்பட்டது.







