திருமலையில் அரச வங்கி ஊழியர் சங்கத்தினர் போராட்டம்!

திருகோணமலையில் அரச வங்கி ஊழியர் சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது.

கடற்படைதள வீதியில் பொது வாகன தரிப்பிடத்திற்கு முன் இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இலங்கை வங்கி, மக்கள் வங்கி, சணச வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, கிராம அபிவிருத்தி வங்கி HDFC வங்கி ஊழியர்கள் இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள கூட்டு ஒப்பந்ததில் அரசாங்கத்தை கைச்சாத்திட வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பல்வேறு வாசகங்களை ஏந்தியவாறு கவனயீர்பை முன்னெடுத்திருந்தனர்.

Leave a Reply