தமிழ்க் கட்சிகளின் கூட்டத்தில் கலந்துகொண்ட எமது உறுப்பினரை அச்சுறுத்தியது உண்மைதான்! விக்னேஸ்வரன்

தமிழ்க் கட்சிகளின் கூட்டத்தில் கலந்துகொண்ட எமது உறுப்பினரை அச்சுறுத்தியது உண்மைதான் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த கோரி யாழ்ப்பாணத்தில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து நடத்திய கூட்டத்தின்போது எமது கட்சியின் சார்பில் பேராசிரியர் சிவநாதன் கலந்து கொண்டிருந்தார்

எமது கட்சியின் சார்பில் கலந்து கொண்டவரை கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது வெளிநாட்டிலிருந்து ஒருவர் தொலைபேசி மூலம் அழைத்து அவரை வெளியேறுமாறு அச்சுறுத்தி இருந்தார். அச்சுறுத்தியவரை எனக்கு நன்கு தெரியும். அவ்வாறு அச்சுறுத்தியவர் பிரான்சில் வசிக்கும் ஜெகன் என்பவர் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் அவ்வாறு செய்திருக்க கூடாது. ஏதாவது பிரச்சினைகள் இருந்திருந்தால் அதனை என்னுடன் பேசி இருக்கலாம்.

கூட்டத்தில் கலந்து கொண்டவரை வெளியேறுமாறு அச்சுறுத்தியது தவறுதான் அது தொடர்பில் நான் அவருக்கு அறிமுகமான ஒருவர் மூலம் பேசியுள்ளேன் என அவர் தெரிவித்தார்.

Leave a Reply