நாவலர் கலாசார மண்டபத்தை புனரமைக்கும் பணி விரைவில் மேற்கொள்ளப்படும்! வி.மணிவண்ணன்

யாழ்ப்பாணத்திலுள்ள நாவலர் கலாசார மண்டபத்தை பாராமரிப்பதில் யாழ். மாநரக சபை தவறியுள்ளதை தான் ஏற்றுக்கொள்வதாக மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

இதனால், நாவலர் கலாசார மண்டபத்தை புனரமைக்கும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாநகராட்சி மன்ற சைவசமய விவகார குழுவினரால் வருடந்தோறும் வெளியிடப்பட்டு வரும் நல்லைக்குமரன் மலரின் 29 அவது இதழ் வெளியீடும், சமய சமூகப் பணியாற்றும் ஒருவருக்கு வருடம் தோறும் வழங்கப்படும் யாழ் விருது வழங்கும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply