கிளிநொச்சி, தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 78 லீற்றர் கசிப்புடன் இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக கிளிநொச்சி மது ஒழிப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய இன்று சுற்றிவளைப்பு இடம்பெற்றது.
இதன்போது, தருமபுரம், நெத்தலியாறு பகுதியில் 61 லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பித்தளை சுருள் இரண்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், தருமபுரம் கல்லாறு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சட்டவிரோத கசிப்பை விற்பனைக்கு கொண்டு சென்ற ஒருவரை தருமபுரம் பொலிசார் வீதிச்சோதனையில் மூலம் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து 17.250 லீற்றர் கசிப்பும், மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களை, நாளை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மது ஒழிப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.






