16 பில்லியன் சீனி வரி மோசடி; சிஐடி விசாரணை ஆரம்பம்!

சீனி இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரியை 50 ரூபாவிலிருந்து 25 ரூபாவாக குறைத்து இலங்கை அரசாங்கத்திற்கு கிட்டத்தட்ட 1600 கோடி ரூபா இழப்பை ஏற்படுத்தியது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு மேலதிக நீதவான் என்.சி. இலங்கசிங்க முன்னிலையில் நேற்று தெரிவிக்கப்பட்டது.

2020 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் திகதி நள்ளிரவு முதல் ஒரு கிலோ சீனிக்கு 50 ரூபாவாக இருந்த விசேட பண்டக வரி 25 ரூபாவாக குறைக்கப்பட்டதன் காரணமாக இலங்கை அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய வரி வருமானம் இழக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தது.

பிற செய்திகள்

Leave a Reply