முச்சக்கர வண்டிக்கு மேலதிகமான எரிபொருள்!

பொதுப் போக்குவரத்து மற்றும் ஓட்டோக்களுக்கு மேலதிகமான எரிபொருளை விநியோகிப்பது தொடர்பில் எரிசக்தி அமைச்சு கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இது தொடர்பில் நேற்று மேலும் தெரிவித்ததாவது:

இலங்கைப் போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கான  எரிபொருள் தேவைகள் தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருகின்றது.

மாகாண சபைகளின் உதவியுடன் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் ஒவ்வொரு பிரிவிற்குமான தேவைகளை இனங்கண்டு, எரிபொருள் தேவைகளை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு பரிந்துரைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பரிந்துரைகள் கிடைத்தவுடன், அடுத்த வாரத்திற்குள் அந்தத் தேவைகளுக்கான கூடுதல் ஒதுக்கீட்டை தனியான கியூ.ஆர். குறியீட்டில் ஒதுக்குவதற்கான வாய்ப்பை அமைச்சகம் பரிசீலிக்கும் – என்றார்.

Leave a Reply