
மாதகல் பகுதியில் ‘ஹைஏஸ் வாகனத்தில் கஞ்சா போதைப்பொருளை கடத்தினார் என்ற குற்றச்சாட்டில் வாகனத்துடன் ஒருவரை இளவாலைப் பொலிஸார் நேற்றுக் கைதுசெய்தனர்.
வவுனியாவிலிருந்து மாதகல் பகுதிக்கு வந்து கஞ்சாவை கொள்வனவு செய்து செல்கின்றார் என்று இளவாலை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரைச் சோதனையிட்ட முற்பட்டபோது, வாகனத்தை நிறுத்தாது தப்பியோடியுள்ளார்.
அந்த வாகனத்தை பொலிஸார் கலைத்துச்சென்று தெல்லிப்பழை பகுதியில் மடக்கிப்பிடித்தனர். வாகனத்தை சோதனைக்கு உட்படுத்தியபோது இரண்டு கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர். அவருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.





