அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஸ் சேலியால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் பதிவு செய்யத் தவறியமைக்காக, கொழும்பு மறை மாவட்ட ஆயரின் ஊடகப் பேச்சாளர் பேராயர் சிறில் காமினி பெர்னாண்டோ தண்டனைக் கோவைச் சட்டத்தின் 164,174 சரத்துகளுக்கு குற்றம் இழைத்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
அரச உத்தியோகத்தர் கடமைகளுக்குக் கீழ்ப்படியாமல், சிறில் காமினி இக் குற்றத்தைச் செய்துள்ளதாகவும் அதற்கு அவர் 17 வருடங்கள் சிறை தண்டனை பெறக்கூடும் எனவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, அரச ஊழியர் ஒருவரின் உத்தரவை மீறிய சிறில் காமினிக்கு எதிராக முறைப்பாடு செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அதன்பின்னர் உரிய உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கும் என நீதிவான் தெரிவித்துள்ளார்.






