யாழ். மாவட்ட அரச அதிபரை சந்தித்தார் 51 ஆவது பிரிவு கட்டளைத் தளபதி!

யாழ். மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனுக்கும், யாழ். மாவட்ட 51 ஆவது பிரிவின் இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்கவுக்கும் இடையிலான மரியாதை நிமித்தமான சந்திப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில், யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் மேலதிக அரச அதிபர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இச்சந்திப்பில், யாழ் மாவட்டத்தில் இராணுவத்தினரால் மக்களின் முன்னேற்றம் கருதி பல்வேறுபட்ட அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அச் செயற்பாடுகளுக்காக மாவட்ட அரச அதிபர் தனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தார்.

மேலும், மக்களின் முன்னேற்றம் கருதி அபிவிருத்திக்கான முழுமையான ஒத்துழைப்புகளை தொடர்ந்து வழங்க தாம் தயாராக இருப்பதாக இராணுவ கட்டளைத் தளபதி தெரிவித்துள்ளார்.

Leave a Reply