நாட்டில் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் நிலையில், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவது முக்கியம் என குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளரான வைத்தியர். சித்திரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும், சுகாதார அதிகாரிகளால் பரிந்துரைக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் சிறுவர்களுக்கு தொடர்ந்து பெற்றோர் கற்பிக்கப்பட வேண்டும்.
பல மாதங்கள் வீட்டில் இருந்த பின்னர் சிறுவர்கள் தங்கள் நண்பர்களுடன் செல்ல வேண்டும். இதன் மூலம் பிள்ளைகள் உடல் நலனை விருத்தி செய்வார்கள்.
சிறுவர்களுக்கு சமூக இடைவெளி தொடர்பில் பயிற்றுவிப்பதிலும், கைகளை கழுவுவதிலும், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதிலும் பெற்றோரின் பங்களிப்பு இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.






