தெல்தெனியவில் புதையல் தோண்டுவதற்கு முயற்சித்த நால்வர் கைது!

Man in handcuffs behind his back

கண்டி, தெல்தெனிய பிரதேசத்தில், புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நால்வர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

மஹதொரலியத்த பிரதேசத்தைச் சேர்ந்த 37, 48, 52, 58 வயதுகளையுடைய நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய பொருட்களையும் குற்றப்புலனாய்வு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த நால்வரையும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply