கம்யூனிஸ்ட் கட்சியை அழித்தவர் டியூ குணசேகர என மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும், அவரின் அமைச்சரவையையும் கடுமையாக விமர்சித்துள்ள இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் டியூ குணசேகர மீது, சரமாரியாக சொற்கணை இவர் தொடுத்துள்ளார்.
மேலும், டியூ குணசேகர என்பவர் பலவீனமான அரசியல் கட்சித் தலைவர். கோப் குழுவின் தலைவராக இருந்து அவர் எதனையும் செய்யவில்லை.
அவர் நல்லாட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கியவர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரமற்ற கைப்பாவை என்பதே எனது கருத்து. சுதந்திரத்துக்குப் பின்னர் உருவான முட்டாள்தனமான அமைச்சரவையே இது. மடத்தனமான முடிவுகள் எடுக்கப்படுகின்றன என டியூ குணசேகர அரசு மீது கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






