நீதியமைச்சர் மொஹமட் அலி சப்ரி தனது அமைச்சு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, இரண்டு கடிதங்களைத் தயாரித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் நேற்று இவர் கையளித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
எனினும், இராஜினாமா கடிதங்களை ஏற்க ஜனாதிபதி மறுத்துவிட்டதாகவும், அலி சப்ரியை பதவியில் வைத்திருக்க ஜனாதிபதி விரும்புவதாக அறியமுடிகின்றது.
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணியின் தலைவராக கலகொட அத்தே ஞானசார தேரரை நியமித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அலி சப்பரி அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.






