புத்தளம், கல்லடி 6 ஆம் கட்டை பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை சிறிய லொறியொன்று பாலம் ஒன்றுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
புத்தளத்திலுள்ள நண்பர்களின் வீட்டுக்கு கம்பளையிலிருந்து வந்த 20, 22, 25 வயதுடைய இளைஞர்கள் ஏழு பேர் இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த ஏழு பேரும் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த லொறியை செலுத்திய சாரதி மற்றும் ஒருவரும் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியிருப்பதுடன், ஏனைய ஐவரும் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இது தொடர்பில் புத்தளம் தலைமையக போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






