பூஸ்டர் டோஸ் கொரோனாத் தொற்றின் தீவிரத்தை 92 சதவீதம் குறைக்கும். கொரோனாத் தொற்றால் ஏற்படும் இறப்பு வீதத்தை 81 சதவீதம் குறைக்கும். பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றவர்களில் வைத்தியசாலைக்கான அனுமதி 93 சதவீதம் குறைவடைகின்றது என மருத்துவர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பூஸ்டர் டோஸை சுகாதார உத்தியோகத்தர்கள் அனைவரும் சந்தர்ப்பத்தை தவற விடாது பெற்றுக் கொள்ள வேண்டும்.
அடுத்து கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செயற்றிட்டம் வயதானவர்களுக்கும் ஏனைய நாட்பட்ட நோயுடையவர்களுக்கும் இன்றியமையாதது ஆகும்.
எனவே, பூஸ்டர் தடுப்பூசியை பெறுவதற்குச் சந்தர்ப்பம் உடையவர்கள் இதனை நழுவ விடாமல் அச்சமில்லாது பெற்றுக் கொள்ள வேண்டும்.
யாழ் போதனா வைத்தியசாலையில் மூன்றாவது தடுப்பூசியை இதுவரை 30 வீதமானோர் மட்டுமே பெற்றுள்ளனர். ஏனையவர்களும் இதனை பெற்றுக் கொள்ள முன்வர வேண்டும் என அவர் தெரிவித்தார்.






