பயணப்பொதியிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு!

சப்புகஸ்கந்த – மாபிம வீதியில் பயணப்பொதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தாயான 42 வயதான பாத்திமா முன்டாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் கணவராலும் பிள்ளைகளாலும் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
மாளிகாவத்தை தொடர்மாடிக் குடியிருப்பில் வசித்த குறித்த பெண்ணைக் கொலை செய்து பயணப்பொதியில் வைத்திருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்த பெண்ணின் கணவர் தனது மனைவி காணாமற்போயுள்ளதாக கடந்த மாதம் 28 ஆம் திகதி ப்ளூமெண்டல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதையடுத்தே குறித்த பெண்ணின் சடலம் இனங்காணப்பட்டது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply