கோழிக் கூட்டிலிருந்து பிடிபட்ட சிறுத்தை குட்டி!

நுவரெலியா, ஹற்றன் என்பீல்ட் கிருஸ்ணபுரம் பகுதியிலுள்ள குடியிருப்பில், கோழிக்கூட்டிலிருந்து சிறுத்தைக் குட்டியொன்று பிடிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம், நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கூட்டிலிருந்த கோழிகள் சத்தமிட்டதையடுத்து, கோழி வளப்பாளர் சென்று பார்த்த போது அதனுள் சிறுத்தை இருப்பதை கண்டுள்ளார்.

இதுதொடர்பில், ஹற்றன் பொலிஸாருக்கும், நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகளுக்கும் அவர் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த இடத்துக்கு சென்ற ஹற்றன் பொலிஸார் சிறுத்தைக் குட்டியை மீட்டுள்ளனர்.

Leave a Reply