வீதி விபத்துக்களை கட்டுப்படுத்த மாபெரும் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி!

அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில், மாபெரும் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி இன்று சனிக்கிழமை காலை மருதமுனை பிரதான வீதியில் ஆரம்பமாகியது.

மருதமுனை றைடர்ஸ் ஹப் சைக்கிளிங் கிளப் ஏற்பாடு செய்த ‘வீதி விபத்துக்களை தவிர்ப்போம் உயிர்களை காப்போம்’ எனும் தலைப்பில் இப்பேரணி இ;;டம்பெற்றது.

கல்முனை, பொத்துவில் பிரதான வீதி வழியாக பொத்துவில் வரை சுமார் 150 கிலோ மீற்றர் தூரம் இப்பேரணி சைக்கிளில் சென்;றுள்ளனர்.

பிரதான வைத்தியசாலை முன்றல்கள் மற்றும் நகர்புற பகுதிகளில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்களுக்கு வீதி விபத்துக்களை தடுக்கும் வழிமுறைகள் பற்றிய அறிவுறுத்தல் துண்டு பிரசுரங்களையும் விநியோகித்தனர்.

இச் செயற்பாட்டில், வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், கல்வி அதிகாரிகள், புத்திஜீவிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply